fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்காவின் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தை இலங்கைக்கு பெற்றுத்தர நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2018 20:08

அமெரிக்காவின் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தை இலங்கைக்கு பெற்றுத்தர நடவடிக்கை

அமெரிக்காவின் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தை இலங்கைக்கு பெற்றுத்தர அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித அமைச்சின் பிரதி சுகாதார செயலாளர் எரிக் ஹாகன் அமைச்சர் ராஜித சேனாரத்னவை நியூயோர்க் நகரில் சந்தித்த போது இவ் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ:நாவின் 73 வது கூட்டத் தொடருக்கு இணைவாக இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தெற்கு மற்றும் தென்கிழக்காசிய வலயத்திலுள்ள நாடுகளின் சுகாதார குறிக்காட்டிகளில் இலங்கை முன்னணியில் இருப்பதை தனக்கு அறிய முடிந்ததாகவும் இதனால் அமெரிக்காவின் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தை இலங்கைக்கு பெற்றுத்தர தயார் என்றும் எரிக் ஹாகன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன ஹாகனுக்கு அழைப்பு விடுத்தார்.

 

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2018 20:08

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க