fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மக்களிடம் பொய்களை கூறி ஏமாற்ற முயற்சிக்கின்றனர்-அமைச்சர் சஜித்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2018 20:00

மக்களிடம் பொய்களை கூறி ஏமாற்ற முயற்சிக்கின்றனர்-அமைச்சர் சஜித்

நாட்டை மீண்டும் சுரண்டி விடலாமென்ற நோக்கில் கடந்தாகால ஆட்சியாளர்கள் மீண்டும் உங்களிடம் வருவார்கள் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு பலர் தடையாக உள்ளனர். மக்களிடம் பொய்களை கூறி ஏமாற்ற முயற்சிக்கின்றனர். இன மத பேதங்களை தூண்டி நாட்டின் ஆட்சியை பிடிக்க சிலர் முயற்சிக்கின்றனர். ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ மீண்டும் வந்து நாட்டை சுரண்ட முயற்சிக்கின்றனர். கடந்த ஆட்சியில் சுரண்டி அனுபவம் கொண்ட இவர்கள் மீண்டும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டளவில் 25 இலட்சம் மக்களுக்கு 20 ஆயிரம் வீடுகளை சொந்தமாக்கி கொடுப்போம் என தெரிவித்தார்.

மட்டு மாவட்டத்தின் கோரளைப்பற்று மீராஓடை தமிழ் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 130 மாதிரி கிராமமான சுவாமி விபுலானந்தர் கோட்டம் இன்று திறந்து வைக்கப்பட்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2018 20:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க