Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுனாமியால் குறைந்தது 832 பேர் பலியாகியிருக்கலாம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2018 15:24

சுனாமியால் குறைந்தது 832 பேர் பலியாகியிருக்கலாம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் குறைந்தது 832 பேர் பலியாகினர் என அந்நாட்டின் தேசிய பேரிடர் முகமை தெரிவித்துள்ளது.

முதலில் நினைத்தததைக் காட்டிலும் பாதிக்கப்பட்ட பகுதி பெரியதாக உள்ளது என அம்முகமை தெரிவித்துள்ளது.

வெள்ளியன்று 7.5 என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிந்த கட்டடங்களின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர் என முகமையின் செய்தி தொடர்பாளர் சுட்டோபோ பூர்வோ நுக்ரோஹோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த நிலநடுக்கம் 6 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகளை உருவாக்கியது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் பாலு நகரில் இடிபாடுகளுக்கு மத்தியில் வெறும் கைகளால் சிக்கியவர்களை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகின்றனர்.

டாங்காலா என்னும் நகரில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தெளிவான தகவல்கள் இல்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

bbc news

 

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2018 15:24
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க