fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கைக்கு சர்வதேசம் பாராட்டு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2018 13:32

இலங்கைக்கு சர்வதேசம் பாராட்டு

ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிப் பயணிப்பதில் இலங்கை கண்டுள்ள முன்னேற்றத்தை சர்வதேசம் பாராட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் நகருக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டேரசுடன் நேற்று முன்தினம் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந்த நிகழ்வு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. செயலாளர் நாயகம், ஜனாதிபதியை கௌரத்துடன் வரவேற்றார்.
ஜனாதிபதி இதன்போது ஜனநாயகம், சுதந்திரம், சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கடந்த  மூன்றரை வருட காலத்தில் இலங்கை முக்கியமான பல அனுபவங்களைப் பெற்றிருப்பதாக தெரிவித்தார்.
எதிர்கால பயணத்தை துரிதப்படுத்துவதற்கு இவை பயன்படுத்தப்படும். பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் கூட இலங்கை கண்டுள்ள முன்னேற்றத்தை பாராட்டுவதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இந்த வேலைத் திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும், ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளுக்கு இலங்கை வழங்கிவரும் ஒத்துழைப்பை செயலாளர் நாயகம் பாராட்டினார். காலநிலை மற்றும் காலநிலை மாற்றங்களின்போது இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்வதற்கு கூடுதலான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால இதன்போது குறிப்பிட்டார்.
இதேவேளை, பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகமும் நியுயோர்க்க நகரில் ஜனாதிபதியை சந்திப்பதற்காக வருகை தந்திருந்தார். ஜனநாயகம். நல்லிணக்கம், சட்டவாட்சி மற்றும் பொதுமக்களின் உரிமை ஆகிய துறைகளில் இலங்கை கண்டுள்ள முன்னேற்றங்களை அவர் பாராட்டினார்.
இந்த வேலைத்திட்டங்களுக்கு எப்பொழுதும் ஒத்துழைப்பை வழங்குவதற்கும் அவர் உடன்பாடு தெரிவித்துள்ளார். போதைப்பொருளை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி செயலளார் நாயகத்திடம் விடயங்களை முன் வைத்தார்.
ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 30, 2018 13:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க