fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிறப்புச்சான்றிதழில் குறிப்பிடப்படும் இன அடையாளம் மாற்றவேண்டும்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 29, 2018 14:22

பிறப்புச்சான்றிதழில் குறிப்பிடப்படும் இன அடையாளம் மாற்றவேண்டும்

பிறப்புச்சான்றிதழ் வெளியிடும்போது, அதில் குறிப்பிடப்படும் இன அடையாளத்தை மாற்றவேண்டுமென உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இனத்திற்கு பதிலாக, இலங்கையர் என குறிப்பிடப்படுவதை ஆரம்பிக்க வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். குழந்தை பிறந்தவுடன் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் என இன ரீதியாக வேறுபடுத்துவதை தவிர்க்கவேண்டும். நாம் ஒரே நாட்டு மக்களாக, இலங்கையர்கள் என்ற ரீதியில் முன்னோக்கி செல்லவேண்டும். சகல இன மக்களையும் மதித்து வாழவேண்டுமென அமைச்சர் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார். யாழ் சாவகச்சேரியில் இடம்பெற்ற நிலமெஹவர ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் வஜிர அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 29, 2018 14:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க