fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட சிகரெட்டுக்களுடன் சந்தேக நபரொருவர் கைது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 29, 2018 11:53

சட்டவிரோதமாக எடுத்துவரப்பட்ட சிகரெட்டுக்களுடன் சந்தேக நபரொருவர் கைது

தீர்வை வரியின்றி சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட இரண்டாயிரம் சிகரெட்டுக்களுடன் சந்தேக நபரொருவர் கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு அருகில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒருதொகை வெளிநாட்டு மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் பிரிவினர் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின்போதே அவை கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர் கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 29 வயதான நபரென தெரியவந்துள்ளது. சந்தேக நபரை இன்றைய தினம் கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 29, 2018 11:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க