fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உணவு பயிர்ச் செய்கைகளுக்கு காட்டு மிருகங்களினால் ஏற்படுகின்ற சேதங்களை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு ஆதரவு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 27, 2018 14:57

உணவு பயிர்ச் செய்கைகளுக்கு காட்டு மிருகங்களினால் ஏற்படுகின்ற சேதங்களை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதிக்கு ஆதரவு

உணவு பயிர்ச் செய்கைகளுக்கு காட்டு மிருகங்களினால் ஏற்படுகின்ற சேதங்களை கட்டுப்படுத்துவதற்கான தீர்வொன்றை வழங்குவதாக சர்வதேச உணவு கொள்கை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு உறுதியளித்துள்ளார்.

 

சர்வதேச உணவு கொள்கை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், ஷென்கன் பேன் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் 73 வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதியை சந்தித்த போதே இவ் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளார். இலங்கையில் விவசாயிகள் செய்கை பண்ணுகின்ற உணவு பயிர்கள், மரக்கறி, பழ வகைகள், போன்றவற்றில் சுமார் 40 சதவீதமானவை மிருகங்களினால் சேதமாக்கப்படுவதாக ஜனாதிபதி இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக வருடாந்தம் உற்பத்தி செய்யப்படுகின்ற உணவுச் செய்கைகளின் மூலம் கிடைக்கின்ற அறுவடை குறைவடைவதன் காரணமாக பொது மக்களுக்கு போசாக்கு நிறைந்த உணவு வேளையொன்றை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் கூட இல்லாமல் செய்யப்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். பல நாடுகள் இப்பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளதகவும் அந்நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்வுகள் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்;ட அனுபவங்களை பயன்படுத்திக் கொண்டு இலங்கையில் காணப்படுகின்ற இந்நிலைமையை குறைத்துக் கொள்ள முடியுமென தான் நம்புவதாக ஷென் கன் பேன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு தேசிய உணவு கொள்கையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும் போசாக்கு நிறைந்த உணவு வேளையொன்றை பெற்றுக் கொள்வதன் மு:க்கியத்துவம் குறித்தும் விசேட நிபுணர்களின் பங்களிப்பை பெற்றுத்தருமாறு ஜனாதிபதி ஷென்கன்பேனிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கென சகல பங்களிப்புக்களையும் பெற்றுத்தருவதாக ஷென்கன் பேன் இதன் போது உறுதியளித்தார். வொஷின்டனில் அமைந்துள்ள சர்வதேச உணவு கொள்கை நிறுவனத்தை பார்வையிட வருகை தருமாறு கோரிய ஷென்கன்பேன் பெங்கொக்கில் நடைபெறுகின்ற உணவு ஆய்வு மாநாட்டில் பிரதான சொற்பொழிவாற்றுவதற்கும் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார்.

 

இதேவேளை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அபிவிருத்தி நிதியம் இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அமெரிக்காவுக்கான விஜயத்திற்கு இணைவாக நியூயோர்க் நகரில் இது கைச்சாத்திடப்பட்டது. இலங்கையின் சமூக அபிவிருத்திக்கு நேரடியாக செல்வாக்கு செலுத்தும் துறைகளின் துரித அபிவிருத்தியை நோக்காக கொண்டு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அபிவிருத்தி நிதியத்துடன் இப்புதிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. வெளியுறவு அமைச்சர் திலக் மராப்பன தலைமையில் இந்நிகழ்வுஇடம்பெற்றது. சமூக மேம்பாட்டுக்கான நிதியம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் சமூக தொழில் முணைவோர் நிதியம் ஒன்றை ஸ்தாபிப்பதற்குமாக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அபிவிருத்தி நிதியம் இலங்கை திட்டங்களுக்கான தனியார் துறையினதும் பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு இதன் மூலம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி கலாநிதி ரொஹான் பெரேரா, பிரதி நிரந்தர பிரதிநிதி சத்யா ரொத்ரிகோ ஆகியோர் இந்நிகழ்வின் போது இணைந்திருந்தனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 27, 2018 14:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க