மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இந்தப்படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. ஜான்வி நடிப்புக்கும் பாராட்டுக்கள் கிடைத்தன. அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தன. பல இயக்குனர்கள் ஜான்வியை அணுகி கதை சொல்லி வருகிறார்கள். இதுகுறித்து ஜான்வி தரப்பில் கூறும்போது ‘‘தமிழ், தெலுங்கு இயக்குனர்கள் ஜான்விக்கு கதை சொல்லி உள்ளனர். தென்னிந்திய மொழிகளில் நடிக்கவும் ஜான்விக்கு விருப்பம் உள்ளது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வரும் என தெரிவித்துள்ளார்
தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஜான்விக்கு விருப்பம்
படிக்க 0 நிமிடங்கள்