பெரும்போகத்தில் உரத்தை பயன்படுத்துவது தொடர்பில் விவசாய அதிகாரிகளை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் முதற்கட்டம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை கேந்திரமாக கொண்டு முன்னெடுக்கப்படும். அரசாங்கத்தினால் மானியமாக வழங்கப்படும் உரம் தவறாக பயன்படுத்தப்படுகின்றமையை தவிர்த்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளை தெளிவுப்படுத்தவும் எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாய அதிகாரிகளை தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டம்
படிக்க 0 நிமிடங்கள்