தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் காணியொன்றை கொள்வனவு செய்தமை தொடர்பில் யோசித்த ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டேசி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிரான வழக்கு கல்கிசை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
யோசித்த ராஜபக்ஷ இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் நீதிமன்றத்தின் அனுமதியுடன் வெளிநாட்டுக்கு சென்றமையே இதற்கு காரணம். டேசி பொரஸ்ட் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இவ்வழக்கு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகள் இன்று பொலிஸ் நிதி மோசடி பிரினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, குறித்த காணி தொடர்பான விலை மதிப்பீட்டு அறிக்கை இதுவரை கிடைக்கவி;ல்லையென அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மேலதிக நடவடிக்கைகளுக்காக அவ் அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஜனவரி 30 ஆம் திகதிக்கு இவ்வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.