fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்-இன்று முதல் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 26, 2018 12:37

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்-இன்று முதல் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை தேசிய டெங்கு தடுப்புப் பிரிவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

‘டெங்குகள் அற்ற நாடு’ என்ற தொனிப்பொருளில் இந்த வாரம் அனுஷ்டிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

இதற்கமைவாக இலங்கை முழுவதும் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு இடம்பெறவுள்ளதாக டெங்கு தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் ஹசித்த திசேரா தெரிவித்துள்ளார்.

 

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்தால் குறைவடைந்துள்ள நிலையில் தற்பொழுது நிலவும் பருவப் பெயர்ச்சி காலநிலை மற்றும் மழை காரணமாக அடுத்து வரும் மூன்று மாதங்களுக்குள் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, பாடசாலை மற்றும் கட்டட நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் இடங்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 26, 2018 12:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க