fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அக்கரைப்பற்று – பொத்துவில் வீதி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 25, 2018 10:56

அக்கரைப்பற்று – பொத்துவில் வீதி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாய், அவரது இரு மகள்கள் மற்றும் மகன் ஆகியோர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது அவர்கள் மீது மோட்டார் வண்டியொன்று மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் 34 வயதுடைய தாயும் அவரது 6 மற்றும் 12 வயதுடைய இரு மகள்களும் உயிரிழந்துள்ளதுடன் 11 வயதுடைய மகன் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த மோட்டார் வண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 25, 2018 10:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க