மாலைத்தீவு ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் மொஹமட் 58.3 வீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பில், 92 சதவீத வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி அப்துல் யாமீன் கயூம் மாலைத்தீவு முன்னேற்ற கழகம் சார்பில் மீண்டும் போட்டியிட்டிருந்தார். எனினும் எதிர்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் மொஹமட் தேர்தலில் முன்னிலை பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.