fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விபத்தில் கடற்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 23, 2018 15:33

விபத்தில் கடற்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார்

சிலாபம், குருநாகல் – கொக்காவில முச்சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் கடற்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார். அவர் மஞ்சற்கடவையில் வீதியை கடக்கும்போது மோட்டார் சைக்கிளொன்றில் மோதுண்டுள்ளார். பலத்த காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் மதவாச்சி – புனானி கடற்படை முகாமில் சேவை புரிந்து வந்தவரென தெரியவந்துள்ளது. அவர் விடுமுறை பெற்று பிங்கிரியவிலுள்ள அவரது வீட்டுக்கு செல்லும்போதே விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 23, 2018 15:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க