fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நுவரெலியா பகுதியில் சுற்றுலா விடுதியிலிருந்து விழுந்து சீன பெண் மரணம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 23, 2018 15:26

நுவரெலியா பகுதியில் சுற்றுலா விடுதியிலிருந்து விழுந்து சீன பெண் மரணம்

நுவரெலிய – மாகஸ்தொட்ட பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றிலிருந்து, விழுந்து வெளிநாட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். சுற்றுலா விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து, சீன நாட்டை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் இவ்வாறு வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை குறித்த விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தபோது அவர் தவறுதலாக விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 23, 2018 15:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க