fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லரை விலை நிர்ணயம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 23, 2018 15:19

அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லரை விலை நிர்ணயம்

அரிசிக்கான உயர்ந்தபட்ச சில்லரை விலையை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதற்கமைய ஒரு கிலோ கிராம் சம்பா அரிசிக்கு 98 ரூபா என்ற உயர்ந்தபட்ச சில்லரை விலையும், ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கு 82 ரூபா என்ற உயர்ந்தபட்ச சில்லரை விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நிர்ணய விலையின் கீழ் நெல்லை கொள்வனவு செய்யவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது உற்பத்திகளை விற்பனை செய்யும்போது பாரிய இலாபம் ஈட்ட முடியுமென நெற் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 23, 2018 15:19

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.77178.72
USA
Pound226.80234.34
UK
Euro194.03201.07
EU
Yen1.551.61
Japan
Yuan25.6326.88
China
Dollar121.02126.32
Australia
CountryCurrencyRate
Dinar469.00
Dinar581.36
Riyal459.22
Riyal48.56
Riyal47.14
Dirham48.13