fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மழை பொழியும் சாத்தியமுண்டு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 22, 2018 15:19

மழை பொழியும் சாத்தியமுண்டு

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் வேளையில் இடி,மின்னலுடன் கூடிய மழைபெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் நாளை தொடக்கம் பிற்பகல் வேளையில் கூடுதலான மழைபெய்யலாம். மேற்கு, ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யலாம். மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் 50 மில்லி மீட்டர்களுக்கும் அதிகமான மழைபெய்யலாம்
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேறகொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 22, 2018 15:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க