fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கனேடிய நாட்டுத் தூதுவர் டேவிட் மக்கின் அமைச்சர் ரஊப் ஹக்கீமை சந்தித்தார்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 22, 2018 13:31

கனேடிய நாட்டுத் தூதுவர் டேவிட் மக்கின் அமைச்சர் ரஊப் ஹக்கீமை சந்தித்தார்

கல்முனையில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் முன்வந்துள்ளது.

இலங்கையிலுள்ள கனேடிய நாட்டுத் தூதுவர் டேவிட் மக்கின்னன் தலைமையிலான குழுவினர் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடனான சந்திப்பின் போதே தூதுவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு அமைச்சரின் பாராளுமன்ற அலுவலகத்தில்  நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.

220 மில்லியன் டொலர் செலவில் கல்முனை இஸ்லாமாபாத் பிரதேசத்தில்; அமைக்கப்படவுள்ள உத்தேச கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்தின் மூலம் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 75 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 101 000 பேர் நன்மையடையவுள்ளனர்.

இக்கலந்துரையாடலில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் டீ.ஜீ.எம்.வீ. ஹப்புஆராச்சி, மேலதிக செயலாளர் எல். மங்கலிகா மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 22, 2018 13:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க