fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இடியுடன் கூடிய மழை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 21, 2018 09:31

இடியுடன் கூடிய மழை

நாட்டின் மத்திய, வடமத்திய, தெற்கு, ஊவா மாகாணங்களில் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு கடுங்காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் வானிலை தொடர்பாக இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யாம். வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யும். பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். என்று திணைக்களம் வானிலை தொடர்பான அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 21, 2018 09:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க