கேரள கஞ்சாவுடன் 3 இளைஞர்கள் கைது
Related Articles
கஞ்சா புகைக்கும் இயந்திரம் மற்றும் கேரள கஞ்சாவுடன் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில் காத்தான்குடி மற்றும் புதிய காத்தான்குடி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செயய்ப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.