Country | Buying | Selling | |
![]() | Dollar | 174.31 | 178.06 |
USA | |||
![]() | Pound | 219.38 | 226.29 |
UK | |||
![]() | Euro | 195.48 | 202.19 |
EU | |||
![]() | Yen | 1.59 | 1.65 |
Japan | |||
![]() | Yuan | 25.11 | 26.28 |
China | |||
![]() | Dollar | 120.42 | 125.45 |
Australia |
கிழக்கில் என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா துருணுதிரிய திட்டத்திற்காக 327 இளம் தொழில் முயற்சியாளர்கள்
Related Articles
கிழக்கு மாகாணத்தில் என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா துருணுதிரிய திட்டத்திற்காக 327 இளம் தொழில் முயற்சியாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பான மீளாய்வு கூட்டம் திருமலையில் இடம்பெற்றது. இம்மாகாணத்தில் இளம் ஏழு தொழில் முயற்சியாளர்களுக்கு துருணுதிரிய கடன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 104 பேருக்கு இக்கடன் உதவி வழங்கப்படவுள்ளது. இக்கடன் திட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் 95 செயற்றிட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் துருணுதிரிய கடன் திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில் நிபுணத்துவத்துடன் மூன்று வருடத்திற்கு குறையாமல் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படும்.