fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தகவல் அறியும் உரிமை வாரம் நாளை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 20, 2018 12:51

தகவல் அறியும் உரிமை வாரம் நாளை

தகவல் அறியும் உரிமை தொடர்பான சர்வதேச தினம் எதிர்வரும் 28 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதனை முன்னிட்டு அரசாங்கம் தகவல் பிரகடனப்படுத்தியுள்ள வாரம் நாளை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிறது.

தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையை பயன்படுத்தும் முறை குறித்து பொதுமக்களுக்கு இதன் மூலம் தெளிவுபடுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

‘கிராமத்திற்கு தகவல் உரிமை’ என்ற தலைப்பில் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பான சட்டம் குறித்த நடமாடும் சேவையும் நடைபெறவுள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளை உள்ளடக்கிய வகையில் பல்வேறு போட்டிகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

இதன் மூலம் பாடசாலை மாணவர்களுக்கும் தகவல் உரிமை தொடர்பாக தெளிவுபடுத்துவதற்கு நிதி மற்றம் ஊடகத்துறை அமைச்சு எதிர்பார்த்துள்ளது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 20, 2018 12:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க