fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வடகொரியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயார் : அமெரிக்கா

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 20, 2018 10:47

வடகொரியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயார் : அமெரிக்கா

வடகொரியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஏவுகணை பரிசோதனை நடவடிக்கைகளை முற்றாக நிறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதே இதன் நோக்கமாகும். வடகொரிய தலைவர் கிம் ஜோன் உன் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே யின் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் சிறந்த அணுகுமுறை கிடைக்கப்பெற்றுள்ளது. அதனை உடனடியாக செயற்படுத்துவதே முதற்கட்ட தேவையாகும். எதிர்வரும் 2021ம் ஆண்டாகும்போது வடகொரியாவில் அணுவாயுத வேலைத்திட்டங்களை முற்றாக நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான துரித பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். தென்கொரிய ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது அணுவாயுத மத்திய நிலையத்தை மூடுவதற்கு வடகொரிய தலைவர் இணக்கம் வெளியிட்டார். இதனையடுத்து அமெரிக்கா குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 20, 2018 10:47

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க