ராஜபக்ஷமார்களிடம் மீண்டும் அதிகாரத்தை ஒப்படைப்பதால் அபிவிருத்தி ஏற்படுமென நம்புவது ஓரு மாயை-பா.உ. சுனில்
Related Articles
ராஜபக்ஷமார்களிடம் மீண்டும் அதிகாரத்தை ஒப்படைப்பதால் நாட்டில் மீண்டும் அபிவிருத்தி ஏற்படுமென நம்புவது ஓரு மாயை என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி வாதுவையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்ஷ அதிகாரத்திற்கு வந்த போது நாட்டு மக்கள் என்ன சொன்னார்கள் அவர் நாட்டை அபிவிருத்தி செய்தால் நாங்கள் பட்டினி கிடப்போம் என மக்கள் தெரிவித்தனர். அதாவது பொருட்களின் விலையை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. நாடு அபிவிருத்தியடைய வேண்டுமென்பதே இதன் பொருளாகும். ஆனால் நாடு அபிவிருத்தியடைய வில்லை. ராஜபக்ஷ குடும்ப ஆட்சியே ஏற்பட்டது. ராஜபக்ஷ குடும்பத்திலுள்ள ஒருவர் வந்து நாட்டை திருத்துவார் என நீங்கள் நம்பினால் அது தவறு. அவ்வாறு நம்புபவர்களுக்கே நான் இவ்வாறு சொல்கின்றேன். 23 ஆயிரத்து 300 கோடி ரூபா அரச வங்கிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை கடன் பட்டுள்ளது. அதாவது மக்களே கடன்பட்டுள்ளார்கள் என்பதே இதன் பொருளாகும். ராஜபக்ஷமார்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எல்லாம் சரியாகி விடுமென மக்கள் கருதுகின்றனர். ஆனால் அதுவொரு கற்பணையாகும் என தெரிவித்தார்.