fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

காமினி செனரத்க்கு எதிரான வழக்கை அக்டோபர் 29ம் திகதி முதல் விசாரணை செய்ய தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 19, 2018 12:51

காமினி செனரத்க்கு எதிரான வழக்கை அக்டோபர் 29ம் திகதி முதல் விசாரணை செய்ய தீர்மானம்

மூன்று நீதிபதிகளின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நீதி மன்றத்தில் FCID மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் புலனாய்வு பிரிவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணியாளர்களின் தலைமை அதிகாரியான காமினி செனரத், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச குடபழகே ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்காக முதலாவது வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசேட ட்ரையல் அட் பார் (Trial at Bar) முறையில் எதிர்வரும் அக்டோபர் 29ம் திகதி விசாரணைகளை மேற்கொள்வதென இன்று நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 

காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை காலை முதல் இடம்பெறும்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 19, 2018 12:51

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க