fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புகையிரத்தில் மோதுண்டு 4 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2018 13:11

புகையிரத்தில் மோதுண்டு 4 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன

புகையிரத்தில் மோதுண்டு 4 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. ஒருகொடவத்தையிலிருந்து மட்டக்களப்பு வரை எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதத்துடனேயே காட்டு யானைகள் மோதியுள்ளன. சம்பவத்தை தொடர்ந்து புகையிரத் தடம்புரண்டுள்ளது. இதனால் மட்டக்களப்பு திருகோணமலை புகையிரத சேவை தடைப்பட்டது.

 

கொழும்பிலிருந்து கல்ஓயா வரையிலான புகையிரத வீதியின் ஹபரண புவக்பிட்டிய 127 வது மைல் கல் தூரத்திற்கு அருகாமையிலேயே விபத்துஏற்பட்டுள்ளது. உயிரிழந்த யானைகளில் கர்ப்பமடைந்த யானையொன்றும் காணப்படுகின்றது. குட்டியை ஈன்ற போதும் அச்சந்தர்ப்பத்திலேயே அதுவும் உயிரிழந்தது. இவ்வீதியில் காட்டு யானைகள் நடமாடுவதாக குறிப்பிடப்பட்டு பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. விபத்து காரணமாக எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதம் தடம்புரண்டது. எரிபொருள் தாங்கிகளிலிருந்து வெளியேறும் எரிபொருளை சேகரிப்பதற்கு பொது மக்கள் செயல்பட்ட விதத்தை அவதானிக்க மு:டிந்தது. புகையிரதம் தடம்புரண்டதையடுத்து வீதிக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பிற்கு இடையிலான புகையிரத சேவை முற்று முழுதாக தடைப்பட்டது. வீதியை புனரமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை புத்தளம் கொட்டுக்கச்சிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட காட்டு யானை தாக்குதலில் சிவில் பாதுகாப்பு உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். 5 காட்டு யானைகள் கிராமத்தில் நடமாடுவதாக கிடைத்த தகவல்களுக்கு அமைய வனஜீவராசிகள் அதிகாரிகளினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கருவெலகஸ்வௌ, மூனமல்கஸ்வௌ பகுதியை வசிப்பிடமாக கொண்ட 53 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2018 13:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க