க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்
Related Articles
கல்விப்பொதுதராதர உயர்தரப்பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் 28ம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். இதேவேளை டிசெம்பர் மாதம் இடம்பெறவுள்ள கல்விப்பொதுதராதர சாதாரணதரப்பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளன. சாதாரணதரப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அதற்கான செயன்முறை பரீட்சைகள் நடத்தப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.