fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்கா அடுத்த வருடம் குடியேறவுள்ள அகதிகளின் எண்ணிக்கையை குறைக்க தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2018 10:24

அமெரிக்கா அடுத்த வருடம் குடியேறவுள்ள அகதிகளின் எண்ணிக்கையை குறைக்க தீர்மானம்

அமெரிக்காவில் அடுத்த வருடம் குடியேறவுள்ள அகதிகளின் எண்ணிக்கையை குறைக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆசிய, ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் வேறு பல நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். அமெரிக்காவில் மாத்திரம் ஒவ்வொரு வருடமும் ஒரு இலட்சத்திற்கும் அதிக மக்கள் அகதிகளாக குடியேறிவருகின்றனர்.

இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முஸ்லிம் நாடுகள் உட்பட 8 நாடுகளுக்கு அமெரிக்காவில் குடியேற தடைவிதித்திருந்தார். அதனையடுத்து 2019ம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடியேறவுள்ள அகதிகளின் எண்ணிக்கையை 30 ஆயிரமாக குறைக்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 18, 2018 10:24

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க