fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2018 16:26

ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு

செப்டம்பர் மாதம் 28ம் திகதி இடம்பெறவுள்ள சர்வதேச தகவல் அறியும் உரிமைகள் தினத்திற்கு அமைவாக தகவல் உரிமை மற்றும் ஊடகவியலாளர்களின் பொறுப்புக்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு ஒன்று இன்று கொழும்பில் நடைபெற்றது.

உலகம் முழுவதும் தகவல்களை அறிந்துக் கொள்ளும் உரிமையை உறுதி செய்த நாடுகள் மத்தியில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளமை இலங்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.

 

தற்போதைய சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது பணியாக தகவல்களை தெரிந்துக்கொள்ளும் உரிமை சட்டம் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை நாட்டு மக்களின் வெற்றி ஆகும்.

 

பொது மக்களை தெளிவுபடுத்தும் வருடம் என்ற தொனி பொருளில் 2018ம் ஆண்டு தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை குறித்து தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் பல நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த வேலைத்திட்டத்திற்கு அமைவாக ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் நிகழ்ச்சிகளையும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு முன்னெடுத்துள்ளது.

 

இன்று நடைபெற்ற செயலமர்வில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளரும் சுயாதீன தொலைக்காட்சியின் தலைவியுமான திருமதி ஜே.எம் திலகா ஜயசுந்தர, அரச தகவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்சன குணவர்தன, சட்டத்தரணி ஜெகத் லியனாராச்சி மற்றும் முன்னணி ஊடகவியலாளர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2018 16:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க