fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விபத்தில் இருவர் பலி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2018 13:02

விபத்தில் இருவர் பலி

ஹட்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்தனர். முச்சக்கர வண்டியொன்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

ஹட்டன் தலவாக்கலை மல்லிகைபூ பிரதேசத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பான காட்சிகள் அருகிலுள்ள சிசிரிவியில் பதிவாகியுள்ளது. தலவாக்கலையிலிருந்து ஹட்டன் நோக்கி பயணமான தனியார் பஸ் ஒன்றும் கொட்டகல நோக்கி பயணம் செய்த முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முச்சக்கர வண்டியில் பயணம் செய்த ஏனைய இருவரும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 17, 2018 13:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க