சந்தேக நபரொருவர் கைது
Related Articles
85 இலட்சம் ரூபாவை திருடிச் சென்றதாக நாடகமாடிய சந்தேக நபர் அக்கரைப்பற்று பொலிசாரால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டார்.
அக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து 85 இலட்சம் ரூபாவை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கொள்ளையிட்டுச்செல்வதாக நிறுத்த வைக்கப்பட்டிருந்த காரின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். உண்மையில் குறித்த கார் உரிமையாளரே மோட்டார் சைக்கிளில் இருவரை வரவழைத்து இவ்வாறு கொள்யையிடுவதாக நாடகமாடுமாறு பணித்துள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் காரின் கண்ணாடியை உடைத்து விட்டு பணத்தை திருடிச்செல்வதாக நடித்து மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளனர். வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் தொலைவிலுள்ள மின்கம்மொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றையவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த காரின் உரிமையாளர் இவ்வாறு நாடகமாடுமாறு தம்மை பணித்ததாக காயமடைந்தவர் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்வாறு பணித்ததாக கூறப்பட்ட கார் உரிமையாளரும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.