Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சர்வதேச நாடுகளுடன் தற்போது சிறந்த தொடர்புகளை நாம் பேணி வருகிறோம்-ஜனாதிபதி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 15, 2018 08:40

சர்வதேச நாடுகளுடன் தற்போது சிறந்த தொடர்புகளை நாம் பேணி வருகிறோம்-ஜனாதிபதி

இம்மாதம் 25ஆம் திகதி ஐநா பொது சபையின் வருடாந்த அமர்வில் இலங்கையில் தொடர்பில் புதிய பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று முற்பகல் இடம்பெற்ற ஊடக பிரதானிகளிளுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஊடக பிரதானிகளுக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஐநா மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள பிரேரணைகளை செயற்படுத்தும் போது உரிய நிவாரணங்களை பெற்று கொள்வது மட்டுமல்லாமல் நாட்டின் இறைமை, தேசிய பாதுகாப்பு, முப்படைகளின் கௌரவத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இப்பிரேரணையில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இப்பிரேரணையை ஐநா மனித உரிமை ஆணையாளர் மற்றும் ஐநா பொதுச்செயலாளருக்கும் எழுத்து மூலம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கூறினார். இக்கூட்டத்தில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதும் அவர்களுக்கு எதிராக இதுவரை வழக்கு தாக்கல் செய்யப்படாதிருப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுடன் கூடிய நிலைமை தொடர்பிலும் ஜனாதிபதி விளக்கமளித்தார்.

லசந்த விக்ரமதுங்க கொலை, கீத் நொயார் மீதான தாக்குதல், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை, எக்னலிகொட காணாமல் போனமை ஆகிய சம்பவங்கள் தொடர்பில் இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. இவ்விடயங்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு நபருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. விசாரணைகள் இடம்பெறுகின்றன. சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் இராணுவத்தின் இரண்டாம் இடத்தில் இருக்கும் நபர் ஒருவர் கடந்த ஐந்து மாதங்களாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டார். ஐந்து மாதங்களாக தடுத்து வைக்கப்பட்ட நிலையில் வழக்கு தொடுக்கப்படாமல் அவர் விடுதலை செய்யப்பட்டார். கடற்படையை சேர்ந்த தசநாயக்க எனும் சிரேஷ்ட அதிகாரியொருவர் பல நாட்கள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டார். வழக்கு தொடரப்படவில்லை. இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பாதுகாப்பை வழங்கினார் என்பதே பாதுகாப்பு படையின் பிரதானிக்கு எதிரான குற்றச்சாட்டாகும். 11 இளைஞர்களை கடத்தி கொலை செய்தவர்களை கைது செய்ததாகவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும், பிணை வழங்கியதாகவும் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அனேகமானோர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் சொல்கின்றது. அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையோ வழக்கோ தாக்கல் செய்யப்படவில்லை. குறித்த இளைஞர்களை கடத்தி கொலை செய்தவர்களுக்கு எதிராக ஏன் வழக்கு தொடரப்படவில்லை. அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படாமல் குற்றப்பத்திரிகை வழங்கப்படாமல் அத்தொழிலுடன் தொடர்புடையவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு உதவியளித்தமைக்காக பாதுகாப்பு படைகளின் பிரதானியை கைது செய்யுமாறு நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு படையின் பிரதானியிடம் வாக்குமூலம் எதுவும் பெறப்படவில்லை. இவ்விடயம் தொடர்பில் நான் கடுமையான தொனியில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கும் சட்டமா அதிபருக்கும் அறிவித்தேன். இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு நான் அவர்களுக்கு அறிவுறுத்தினேன். அப்படி செய்யும் போது இராணுவ வீர்ர்கள் வேட்டையாடப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டடு அரசாங்கத்திற்கு எதிராக வைக்கப்படும். ஆகவே இந்நிலைமை தொடர்பில் பொது மக்களும் சர்வதேச சமூகமும் தவறான புரிதலை ஏற்படுத்தி கொள்கின்றனர். ஆகவே இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யுமாறு நான் கூறினேன். அவ்வாறு வழக்கு தொடுக்கப்ப்டாமல் இருப்பது பிரச்சினைக்குரிய விடயமாகும். தண்டனை வழங்குவது நீதிமன்றத்தின் பணியாகும் என தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இக்கூட்டத்தில் ஊடக பிரதானிகளுடன் தற்போதைய ஆட்சியில் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லையென தெரிவித்தார்.

இத்தனை இராணுவ முகாம்கள் இருந்தன, இவ்வளவு இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன, இதற்கெல்லாம் காரணம் இவை தான் என ஊடகங்களில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. யுத்தம் முடிந்து விட்டது. சர்வதேச நாடுகளுடன் தற்போது சிறந்த தொடர்புகளை நாம் பேணி வருகிறோம். யுத்தம் இடம்பெற்று பத்து வருடங்கள் முடியும் போது இராணுவம் மீள கட்டியமைக்கப்படும் என்பதை பொதுவான அறிவுள்ள நபர்கள் அனைவரும் அறிந்து வைத்திருப்பர். இதுதான் ஒருநாட்டில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறையாகும். இராணுவம் மீள் கட்டியமைக்கப்படுவதால் அதன் மூலம் அந்த இராணுவம் ஒருபோதும் பலவீனமடையாது. தற்போதும் கூட இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு இடம்பெறுகின்றது. இராணுவம் மேலும் கட்டியெழுப்பப்படும். அது ஒருபோதும் பலவீனப்படுத்தப்படவில்லை. தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து முப்படையினர் அனைவரையும் நான் அண்மையில் வரவழைத்தேன். நான் அவர்களிடம் இன்னும் 100 வருடஙகளில் நாடடில் யுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான உத்தியோகபூர்வ ரீதியில் சாத்தியகூறுகள் உண்டா என கேட்டேன். அப்படியெதும் இல்லையென அவர்கள் சொன்னார்கள். ஆகவே நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட முன்னாள் இராணுவ தலைமைகள் அனைவரையும் அழைத்து ஒரு குழுவொன்றை அமைக்குமாறும் அத்துடன், கொழும்பு மற்றும் ஜயவர்தனபுற பல்கலைக்கழகங்களை இணைத்து யுத்தத்திற்கான பின்னணி அதன் ஆரம்பம் யுத்த வெற்றி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பக்க சார்பற்ற நூல் ஒன்றை தயாரிக்குமாறு கூறினேன். அது எமக்கும் எமது வரலாற்றுக்கும் மிகவும் இன்றியமையாததாகும் என தெரிவித்தார்.

இலங்கை சிங்கபூர் ஒப்பந்தம் தொடர்பிலும் ஜனாதிபதி இங்கு வருகை தந்திருந்த ஊடக பிரதானிகளுக்கு தெளிவுப்படுத்தினார்.

இவ்வொப்பந்தம் தொடர்பில் நான் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை நியமித்தேன். தற்போது அவர்கள் இது தொடர்பில் ஆராய்கின்றனர். அந்த குழு சிங்கபூர் ஒப்பந்தத்தில் உள்ள நாட்டுக்கு பாதகமான விடயங்களை எடுத்துரைத்தால் அவற்றை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பொறுப்பினை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதேபோல் பாரதூரமான விடங்களை சுட்டிக்காட்டினால் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் தயங்க மாட்டேன் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நீர்பாசன துறையின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற்றிட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி ஊடக பிரதானிகளிடம் விளக்கமளித்தார்.

காலநிலை மற்றும் காலநிலையை எடுத்து கொண்டால் கடந்த வருடத்தை போன்று இவ்வருடம் நமக்கு பெரிய பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை. இவ்வருடம் போதுமான மழைவீழ்ச்சி கிடைத்தது. இதனால் அரிசி இறக்குமதியை தடை செய்தோம். நெல்லுக்கு பாரிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபற்றி ஊடகங்கள் எதுவும் பேசுவதில்லை. நெல்லுக்கான விலை அதிகரித்தாலும் அரிசியின் விலை அதிகரிக்காமல் இருப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 15, 2018 08:40
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க