fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

லொறி சில்லில் சிக்கி நபரொருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2018 15:17

லொறி சில்லில் சிக்கி நபரொருவர் உயிரிழப்பு

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கரோலினா பகுதியில் லொறி சில்லில் சிக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 47 வயதான நுவரெலிய ஹாவாஎலிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி உரம் ஏற்றிச்சென்ற லொறியின் உதவியாளர், லொறியிலிருந்து விழுந்து பின்புற சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் லொறியின் சாரதி வட்டவளை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் லொறியை பொலிசார் தடுத்து வைத்துள்ளனர். உயிரிழந்தவரின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான வைத்திய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2018 15:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo