fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2018 13:31

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவால் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்னும் சற்று நேரத்தில் குறித்த அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. வாராந்த அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், அடுத்த வாரத்திற்கான அமைச்சரவை தீர்மானங்களும் எடுக்கப்பட்டிருந்தன. இந்நிலையிலேயே ஜனாதிபதி திடீரென இன்று அமைச்சரவை கூட்டமொன்றுக்காக அமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, துமிந்த திசாநாயக்க, கயந்த கருணாதிலக்க, ரவூப் ஹக்கீம், நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சாகல ரத்னாயக்க ஆகியோர் நாட்டில் இல்லாத நிலையில் இவ்வமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2018 13:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க