Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கையும், இந்தோனேசியாவும் மூலோபாய திட்டத்தில்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2018 11:12

இலங்கையும், இந்தோனேசியாவும் மூலோபாய திட்டத்தில்

ஐரோப்பிய சந்தையில் போதுமான பகுதியை தக்கவைக்க இலங்கையும், இந்தோனேஷியாவும் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளன.

இலங்கைக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தி, இந்து சமுத்திரத்தின் சுதந்திரக் கப்பல் போக்குவரத்தையும், சமாதானத்தையும் பாதுகாக்கும் வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று இந்தோனேஷிய ஜனாதிபதி ஜக்கோ விடோடோ தெரிவித்துள்ளார்.

 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் வியட்நாமில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய சந்தையில் போதுமான பகுதியை தக்க வைப்பதற்காக இரண்டு நாடுகளும் இணைந்து பொது மூலோபாயத்தை முன்னெடுப்பது பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

இலங்கைக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடையிலான வர்த்தக முதலீட்டு வாய்ப்புக்களை மேம்படுத்தும் நோக்கில் இருதரப்பு பிரதிநிதிகளை உள்ளடக்கிய கூட்டுக் குழுவின் மூலம் கால சட்டகத்தை தயாரிப்பதற்கான வேலைத்திட்டம் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தையும் இதன் மூலம் ஏற்படுத்த முடியும் என்றும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2018 11:12
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க