Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மீண்டும் விளக்கமறியலில்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 12, 2018 13:09

சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மீண்டும் விளக்கமறியலில்

கடந்த அரசாங்கத்தில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் குறித்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியார்ச்சி எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

2008, 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தன ஹெட்டியாராச்சி, கோட்டை மஜிஸ்திரேட் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஜிஸ்திரேட் உத்தரவிட்டார். பதினொரு இளைஞர்களை காணாமலாக்கிய சம்பவத்தின் சந்தேக நபரான முன்னாள் லெப்டினன் கமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சிக்கு மறைந்திருப்பதற்கு முன்னாள் கடற்படை தளபதி ரவிந்திர விஜேகுணவர்தன உதவி வழங்கியதாக குற்றஞ்சுமத்தப்பட்டது. இது குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வருகை தந்து வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு நீதிமன்றம் அவருக்கு இன்று உத்தரவிட்டது. கடற்படையின் முன்னாள் லெப்டினன்கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கின் சந்தேக நபராக காணப்பட்டதுடன் அவர் உள்ளிட்ட பிரதிவாதிகள் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 12, 2018 13:09
Write a comment

No Comments

No Comments Yet!

Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.

Write a comment
View comments

Write a comment

Your e-mail address will not be published.
Required fields are marked*

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க