fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜனாதிபதி விவசாயின் பிள்ளை என்பதனால் இவை எமக்கு கிடைக்கின்றன-அமைச்சர் துமிந்த

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 12, 2018 13:04

ஜனாதிபதி விவசாயின் பிள்ளை என்பதனால் இவை எமக்கு கிடைக்கின்றன-அமைச்சர் துமிந்த

ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து விவசாயத்தையும் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புவதற்கு செயல்பட்டு வருவதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். விலச்சிய பகுதியில் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று விவசாயிகளை பாதுகாத்தும், நீரை வழங்கியும், விவசாயத்தை பலப்படுத்திக் கொண்டும் இப்பயணத்தை முன்னெடுத்துச் செல்கின்றார். எமக்கு வறட்சி தடையாக காணப்பட்டது. ஆனால் வறட்சியை நாங்கள் தடையாக கொள்ளாது அதனை பயன்படுத்தி குளங்களை அகழ்ந்தும், கால்வாய்களை தோண்டியும் பயணத்தை தொடர்ந்து செல்கின்றோம். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஒரு விவசாயியின் பிள்ளை என்பதனால் இவை அனைத்தும் எமக்கு கிடைக்கின்றன. நல்லாட்சி அரசாங்கத்தின் மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் காணப்படுகின்றார். பிரதமர் வர்த்தகம் தொடர்பாகவும் திறந்த பொருளாதாரம் தொடர்பாகவும் கதைப்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். இவை இரண்டும் இன்றியமையாதவை. ஒருபுறம் விவசாயம் தொடர்பாகவும் மறுபுறம் பொருளாதாரம் தொடர்பாகவும் தெளிவான நிலைப்பாடு காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. ஒரு பக்கம் தேசிய பொருளாதாரம், கட்டியெழுப்பப்படும் போது, மறுபக்கம் தொழிற்சாலைகள் ஊடான பொருளாதாரம் பலமடைந்து செல்கின்றது அவர் மேலும் குறிப்பிட்டார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 12, 2018 13:04

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2019

logo