fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்திய அணிக்கு 464 ஓட்டங்கள் இலக்கு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2018 16:36

இந்திய அணிக்கு 464 ஓட்டங்கள் இலக்கு

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி இடம்பெற்றுவருகின்றது.நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 332 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தனது இறுதிப்போட்டியில் விளையாடும் அலஸ்டயர் குக் 71 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 89 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்துவீச்சில் ஜடேஜா 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இந்திய அணி தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்து 292 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களை பெற்றுகக்கொடுத்தார்.அண்டர்சன் ஸ்டோக் மற்றும் மொயின் அலி ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.அதன் பின்னர் தனது 2ஆவது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 423 ஓட்டங்களுக்கு 8 விக்கட்டுக்ளைக இழந்திருந்த வேளை ஆட்டத்தை இடை நிறுத்திக்கொண்டது.அலெஸ்டயர் குக் 147 ஓட்டங்களை பெற்றதோடு ஜோ ரூட் 125 ஓட்டங்களை பெற்றார்.

464 ஓட்டங்களை இலக்காக கொண்டு தனது 2ஆவது இன்னிங்சில் ஆடி வரும் இந்தியா சற்று முன்னர் வரை 3 விக்கட்டுக்களை இழந்து 97 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.இன்று போட்டியின் இறுதி நாளாகும்.

3-1 எனும் அடிப்படையில் இங்கிலாந்து முன்னிலையிலுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2018 16:36

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க