fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கோட்டா பிணையில் விடுதலை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2018 14:02

கோட்டா பிணையில் விடுதலை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேர் விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜரானதன் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். விசேட மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட 2 வது வழக்கு இதுவாகும்.

காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 40 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி, மெதமுல்லனவில் டி.ஏ.ராஜபக்ஷ நூதன சாலை மற்றும் நினைவு தூபி நிர்மாணிக்கப்பட்டிருப்பதாக சட்டமா அதிபர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மீது சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கே இன்று விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் மு:ன்னாள் தலைவர் பிரசாத் ஹர்சன டி சில்வா , முன்னாள் பொது முகாமையாளர் பத்ரா உதுலூவதி, முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான சுதம்மிகா ஆட்டிக்கல, சமன்குமார, மகிந்தசாலிய மற்றும் ஸ்ரீமதி மல்லிகா ஆகியோர் இவ்வழக்கின் ஏனைய பிரதிவாதிகளாவர். இன்று விசேட மேல் நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் ஒரு இலட்சம் ரூபா நிதி பிணையிலும் 10 இலட்சம் ரூபா 2 சரீர பிணையிலும் இவர்களை விடுதலை செய்ய விசேட மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. நம்பிக்கை மோசடி, சூழ்ச்சி, அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவ்வழக்கிற்கு ஆதாராமாக சட்டமா அதிபர் 105 ஆவணங்களையும் சாட்சியாளர்களாக 80 பேரை குறிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2018 14:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க