fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரதமர் வியட்நாம் பயணம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2018 13:17

பிரதமர் வியட்நாம் பயணம்

வியட்நாமின் ஹெனோய் நகரில் நடைபெறும் ஆசியான் உலக பொருளாதார மாநாட்டில் பங்குபற்றுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வியட்நாம் நோக்கி புறப்பட்டார். உலக பொருளாதார மாநாட்டின் அழைப்பின் பேரிலேயே பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இம்மாநாட்டில் ஆசியான் அமைப்பு மற்றும் ஏனைய நாடுகளிலிருந்தும் உயர்மட்ட தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இசட் வலயத்தின் எதிர்கால பொருளாதார மேம்பாடு மற்றும் சவால்கள் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்படும். மாநாட்டில் வியட்நாம் பிரதமர் கியென் சூன்புக் வரவேற்புரை நிகழ்த்தவுள்ளார். சிங்கப்பூர் பிரதமர்  லீ சியென் லுன் , சீன உப பிரதமர் ஹூசுன் ஹூவா ஆகியோரும் உரையாற்றவுள்ளனர். ஆசிய நாட்டு தலைவர்களின் கலந்துரையாடல் அரங்கமும் இங்கு நடைபெறும். இலங்கை தூதுக்குழுவில் அமைச்சர் மலிக் சமரவிக்ரம, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மேலதிக செயலாளர் சமன் அதாவுத ஹெட்டி, விசேட உதவியாளர் சென்ரா பெரேரா ஆகியோரும் இணைந்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2018 13:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க