மஹிந்த ராஜபக்ஷ மூளைக்கோளாறு உள்ளவர் அல்ல- பிரதமர்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 9, 2018 19:40

மஹிந்த ராஜபக்ஷ மூளைக்கோளாறு உள்ளவர் அல்ல- பிரதமர்

தடைகள் சவால்களுக்கு மத்தியில் அறிவை மையமாக கொண்ட பொருளாதரத்தின் ஊடாக கிராமத்தை கட்டியெழுப்பி நாட்டை கட்டியெழுப்ப போவதாக கண்டியில் இடம்பெற்ற வைபமொன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கண்டிக்கு விஜயம் செய்த பிரதம் ரணில் விக்கிரமசிங்க மல்வத்தை மகாநாயக்கர் அதி சங்கைக்குரிய திப்பெட்டுவாவ ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். கண்டி மாவட்ட கட்சிக்கிளைகளின் கூட்டத்திலும் பிரதமர் கலந்துகொண்டார். அமைச்சர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் இதில் கலந்துகொண்டனர். மக்களின் இறையாண்மையை போதைக்காரர்களிடம் ஒப்படைக்க முயற்சிப்போர் குறித்தும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.

நாம் இவ்விடத்திற்கு வந்து ஆட்சியமைத்திருப்பது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுடன் நம்மவர்களுக்கும் உதவுவதற்கே அடுத்த தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சியை வெற்றிபெறச்செய்வதே எமது நோக்கம். அன்று கடனையும் வட்டியையும் அப்போதய அரசாங்கம் திண்டாடியது. 6 ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக இருப்பதற்கு ஆணை இருந்தபோதிலும் 4 ஆண்டுகளில் தேர்தலை நடத்துபவர் யார்? அல்லது அவர் ஒரு மூளைக்கோளாறு உள்ளவர். இல்லாவிட்டால் அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியாமலுள்ளவர் ஆவார். மஹிந்த ராஜபக்ஷ மூளைக்கோளாறு உள்ளவர் அல்ல. ஆனால் அவரால் அரசாங்கத்தை கொண்டுசெல்ல முடியவில்லை. வரவு செலவுத்திட்டத்தை கொண்டுசெல்லமுடியாமல் தப்பியோடிவிட்டார். சிரமமாக இருப்பதை நாம் உணர்ந்துகொண்டோம். ஆனால் மக்களுக்கு உதவவேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டோம். மக்களை இடைநடுவில் கைவிடவில்லை. 1990 சுவசரிய அம்பியுலன்ஸ் சேவை இல்லாது போனால் 5 ம் திகதி எத்தனை பேர் இறந்திருக்கலாம். இன்னும் பல வேலைத்திட்டங்கள் உண்டு. கிராம மட்டத்தில் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். கடந்த முறை 17 ஆண்டுகளையே அதற்காக பெற்றுக்கொண்டோம் அவ்வளவு காலம் தேவையில்லை. 10 ஆண்டுகள் போதுமானது. நாட்டை கட்டியெழுப்பி அதனை பாதுகாப்பாக முன்னெடுக்க வேண்டும். உலகம் மாறுகின்றது. இன்று அறிவை மையமாககொண்ட ஒரு பொருளாதார திட்டம் உண்டு. இதனை முன்னெடுக்கும் போது திட்டுவார்கள் அதற்கு மத்தியில் நாம் எமது பணிகளை முன்னெடுக்க வேண்டும். இன்று மொட்டுச்சின்னம் என்ன செய்கின்றது. மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இறையாண்மையை போதைப்பொருள் காரர்களிடம் வழங்கியுள்ளது. நாம் அவர்களுக்கு பிரதேச சபைகளை ஒப்படைத்துவிட்டோம். இ;ப்போது அவர்கள் அவற்றை சிறப்பாக செய்கிறார்களாம். சிலர் கம்பரெலிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தடையாகவுள்ளனர். 100 வீதம் அனைத்தையும் நிறைவேற்ற முடியாமல் விட்டாலும். கூடுதலான பகுதியை நிறைவேற்றுவோம் என பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

 

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 9, 2018 19:40