கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இல்லை
Related Articles
தனது 70ஆவது ஆண்டை குறிக்கும் விதமாக வட கொரிய மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பை நடத்த அதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை காட்சியில் வைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
அதிபர் கிம் ஜாங்-உன் அந்த நிகழ்ச்சியில் உரையாற்றினாரா இல்லையா என்பதும் தெளிவாக தெரியவில்லை.
வட கொரியாவின் ஆயுத கிடங்குகள் குறித்தும், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதங்களற்ற நிலையை உருவாக்குவதாக வட கொரியா கொடுத்த உறுதிமொழியின் நிலை குறித்தும் தெரிந்து கொள்ள இந்த அணிவகுப்பு நெருக்கமாக கண்காணிக்கப்படுகிறது.
அதிக அளவிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள் அணிவகுப்பில் கொண்டுவரப்பட்டால், பிற நாடுகளிடையே அது கோபத்தை ஏற்படுத்தலாம்.
தற்போது நடைபெற்ற அணிவகுப்பு குறித்த எந்த வீடிோக்களும் வெளியிடப்படவில்லை. ஆனால் நிகழ்ச்சி நடக்கும்போது இருந்த ஏ எப் பி செய்தி நிறுவத்தின் செய்தியாளர் மற்றும் என் கே நியூஸ் நிறுவனம், அரசு ஊடகத்தில் இருந்து வெளியிட்ட காட்சியை பார்த்தால், அங்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அங்கு இல்லை என்று கூறுகின்றனர்.
BBC NEWS