fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கொழும்பு துறைமுக நகரின் வர்த்தக மத்திய நிலையம் எதிர்வரும் மாதம் திறந்துவைப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 8, 2018 16:59

கொழும்பு துறைமுக நகரின் வர்த்தக மத்திய நிலையம் எதிர்வரும் மாதம் திறந்துவைப்பு

கொழும்பு துறைமுக நகரின் வர்த்தக மத்திய நிலையம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18ம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது. விகாரமஹாதேவி பூங்காவை போன்று பலமடங்கு பாரிய பூங்காவொன்றும் மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டலி ச்சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுக நகர திட்டத்தில் முதலாவதாக குறித்த பூங்காவே மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

துறைமுக நகரில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்தோம். முக்கிய மாற்றமாக அதன் காணி உரிமையை இலங்கை அரசாங்கத்திற்கென பெற்றுக்கொண்டோம். குறித்த பகுதி எந்தவொரு வெளிநாட்டவருக்கும் வழங்கப்படமாட்டாது. தற்போது 269 ஹெக்டெயர் நிலப்பரப்பும் இலங்கை அரசாங்கத்துக்கே உரித்தானது. துறைமுக நகரினூடாக கொழும்பு நகருக்கு ஏதேனும் ஆபத்துக்கள் உண்டா என்பது தொடர்பான சுற்றாடல் ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளோம். பலவிதமான முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றன. அவை தொடர்பில் பல தரப்பினரைகொண்டு ஆராய்ந்து வருகிறோம். குறித்த பிரச்சினைகளுக்கு சர்வதேச தரத்திலான தீர்வுகளை பெற்றுக்கொடுப்போம். 265 ஹெக்டெயர் நிலப்பரப்பில் யாருக்கும் பயணிக்கக்கூடிய வகையிலான கால்வாய் மற்றும் பூங்கா ஆகியன உருவாக்கப்படவுள்ளது.

பூங்காவை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மரங்கள் நடப்பட்டு வருவதோடு, ஆய்வு மட்டத்திலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பாட்டலி ச்சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வர்த்தக மத்திய நிலையம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டதன் பின்னர் உலகின் பல நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகைத்தருவதற்கு தயாராக உள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 8, 2018 16:59

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33