நாட்டின் சில பகுதிகளில் நாளை முதல் மழை
Related Articles
நாட்டின் சில பகுதிகளில் நாளை முதல் பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் இன்று பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும். ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளை மாவட்டங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு காற்று வீசக்கூடும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவக்கூடும் .