fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 8, 2018 15:17

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு விரைவில் திருமணம்

வித்தியாசமான குரல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பிரபல சினிமா பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர் மலையாள பட உலகில் அதிகம் பாடல்களை பாடியுள்ளார். விக்ரம் பிரபு நடித்து திரைக்கு வந்த ‘வீர சிவாஜி’ படத்தில் பாடிய ‘சொப்பன சுந்தரி நான்தானே’ பாடல் அவரை தமிழில் பிரபலப்படுத்தியது என்றும் கூறலாம்.

விஜயலட்சுமிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நிச்சயமானது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அந்த திருமணம் நின்று போனது. இந்த நிலையில் பலகுரல் கலைஞர் அனூப் என்பவருக்கும் விஜயலட்சுமிக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டினரும் முடிவு செய்துள்ளனர். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் எதிர்வரும் 10ம் திகதி விஜயலட்சுமியின் வீட்டில் நடக்கிறது. திருமணம் அக்டோபர் 22ம் திகதி வைக்கம் மகாதேவ கோவிலில் நடக்கிறது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 8, 2018 15:17

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க