அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஆப்கானிஸ்தானுக்கு திடீர் விஜயம்
Related Articles
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மெட்டிஸ் ஆப்கானிஸ்தானுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் நேட்டோ படையின் புதிய தளபதியான ஜோசப் டன்போர்ட்டை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் ஜேம்ஸ் மெட்டிஸின் விஜயம் அமைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது விஜயத்தின்போது ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி உள்ளிட்ட உயர்மட்ட அரச தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஆப்கானிஸ்தான் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஜேம்ஸ் மெட்டிஸ் அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக பதவியேற்றதன் பின்னர் ஆப்கானிஸ்தானுக்கு மேற்கொள்ளும் நான்காவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.