பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது
Related Articles
பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஐவர் கல்கிஸ்ஸை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கல்கிஸ்ஸை பொலிஸாரால் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 4 கையடக்கத்தொலைபேசிகள், இரு தொலைக்காட்சிகள், மடி கணனியொன்று, தங்க சங்கிலியொன்றின் அடகுப்பத்திரம், இரு இரும்பு பட்டயங்கள் மற்றும் இரு ப்ளாஸ்டிக் கைத்துப்பாக்கிகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் ரத்மலானை மற்றும் மொரட்டுவை ஆகிய பிரதேசத்தை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது. அவர்களை கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.