போதை மாத்திரைகளுடன் இளைஞரொருவர் கைது
Related Articles
5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 20 வயதான இளைஞரொருவர் நுரைச்சோலை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். போதை மாத்திரைகளை வீட்டில் மறைத்துவைத்திருந்த நிலையில், அவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது சகோதரர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதற்கென தனக்கு தந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதற்கமைய அவரது சகோதரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். அவர் நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்தில் வர்த்தக செயற்பாடுகளில் ஈடுபடும் நபரென தெரியவந்துள்ளது. வர்த்தகர்கள் மற்றும் பிரதேச பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து குறித்த நபர் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.