fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கினிபெட்டி பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 7, 2018 15:22

கினிபெட்டி பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்

நல்லாட்சி அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் பல பொலன்னறுவையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. கினிபெட்டி பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதியினால் இன்று முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டன. பராக்கிரம சமுத்திரத்தில் இருந்து பல ஏக்கர் நிலங்களுக்கு நீரை விநியோகித்து வரும் வடக்கு வாவியின் பிரதான நீரை பாய்ச்சும் பகுதியாக கினிபெட்டி பாலம் அமைகின்றது. இப்பாலம் உடைந்தமையினால் விவசாயிகள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர். 15 ஆயிரம் ஏக்கர் வயல் நிலத்திற்கு நீரை விநியோகிப்பதும் வரையறுக்கப்பட்டன. இதுகுறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி புதிய பாலத்தை துரிதமாக நிர்மாணிக்குமாறு ஆலோசனை வழங்கினார். இதன் பயனாக நிர்மாணிக்கப்படவுள்ள புதிய பாலத்திற்கென 250 மில்லியன் ரூபா செலவிடப்படும்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 7, 2018 15:22

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க