சீரற்ற காலநிலையினால் வடகொரியாவில் 76 பேர் பலி
Related Articles
வடகொரியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மண்சரிவினால் 76 பேர் உயிரிழந்துள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 75 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் கூடுதலானோர் சிறுவர்கள் என அறிவிக்கப்படுகின்றது. ஆயிரத்திற்கும் கூடுதலானோர் வீடுகளை இழந்துள்ளனர். சுமார் 800 கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. 2016ஆம் ஆண்டில் வடகொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 130கும் கூடுதலானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.